தேசிய அளவில் நடைபெற்ற சிலம்பம் போட்டி... 20 பதக்கங்களை வென்ற தமிழக வீரர்கள்.! | Chennai

Update: 2024-05-24 01:54 GMT

அரியானாவில் நடைபெற்ற சிலம்பம் போட்டியில் 20 பதக்கங்களை வென்று சென்னை அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. சுமார் 500க்கும் மேற்பட்ட வீரர் வீராங்கனைகள் பங்கேற்ற யூத் கேம்ஸ் புரோ லீக் சிலம்பம் போட்டியில், சென்னை அணி சார்பாக 20 பேர் மூன்று பிரிவுகளில் பங்கேற்றனர். இதில் அனைத்திலும் வெற்றி பெற்று 18 தங்கம் 2 வெள்ளி என 20 பதக்கங்களுடன் சென்னை திரும்பிய வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த வெற்றியின் மூலம் அனைத்து வீரர்களும் சர்வதேச அளவிலான சிலம்பம் போட்டியில் பங்கேற்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் செய்திகள்