ரயில் நிலையங்களுக்கு இடையே பூங்கா : குழந்தைகளை கவரும் அழகிய ஓவியங்கள், சிற்பங்கள்!

சென்னை அடையார்- திருவான்மியூர் இடையிலான ரயில் நிலையங்களுக்கு இடையே பூங்கா அமைக்கப்பட்டுள்ளது...;

Update: 2022-04-05 09:23 GMT
ரயில் நிலையங்களுக்கு இடையே பூங்கா : குழந்தைகளை கவரும் அழகிய ஓவியங்கள், சிற்பங்கள். சென்னை அடையார்- திருவான்மியூர் இடையிலான ரயில் நிலையங்களுக்கு இடையே பூங்கா அமைக்கப்பட்டு குழந்தைகளை கவரும் வகையில் அழகிய சிற்பங்கள் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. எம்.ஆர்.டி.எஸ் பசுமை திட்டத்தின் கீழ் அமைக்கப்படும் இந்த பூங்காவில் குழந்தைகள் விளையாடும் வகையில் அழகிய சறுக்குகள் மற்றும் விளையாட்டு உபகரணங்கள் ஏராளமாக அமைக்கப்பட்டுள்ளன. மேலும் மெட்ரோ ரயில் தூண்களில் கண்ணைக் கவரும் அழகிய குழந்தைகள் கார்ட்டூன் சித்திரங்கள் வரையப்பட்டுள்ளன. இதனுடன் தமிழ் கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் வகையிலும் பல்வேறு ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. இதனால் குழந்தைகள் அதிக அளவில் இந்த பூங்காவிற்கு பெற்றோருடன் வந்து விளையாடி மகிழ்கின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்