"திமுகவின் செயல்பாடு சிரிப்பை வரவழைக்கிறது" - டிடிவி தினகரன் டுவிட்

"பிரதமர் மோடி எங்களுக்கு எதிரி இல்லை. விருந்தினராக வருபவருக்கு கறுப்புக்கொடி காட்ட வேண்டிய அவசியமில்லை" என்று திமுக கூறியுள்ளதைப் பார்த்தால் சிரிப்பு தான் வருகிறது என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.;

Update: 2021-12-29 14:22 GMT
"பிரதமர் மோடி எங்களுக்கு எதிரி இல்லை. விருந்தினராக வருபவருக்கு கறுப்புக்கொடி காட்ட வேண்டிய அவசியமில்லை" என்று திமுக கூறியுள்ளதைப் பார்த்தால் சிரிப்பு தான் வருகிறது என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
இது  தொடர்பாக டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்,
எதிர்க்கட்சியாக இருந்தால் ஒன்று,ஆளுங்கட்சியான பிறகு வேறொன்று என தி.மு.க போடும் இரட்டை வேடங்கள் தற்போது அம்பலமாகி வருவதாக தெரிவித்துள்ளார். இதற்கு முன்பு பிரதமர் தமிழகம் வந்த நேரத்தில் கறுப்புக்கொடி காட்டியது தவறு என இதன்மூலம்  தி.மு.க ஒப்புக்கொள்கிறதா? என்றும் தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்