தனிசன்னதியில் அருள்பாலிக்கும் எமதர்மராஜா - வாஞ்சி நாதர் ஆலயத்தில் குவிந்த பக்தர்கள்
திருவாரூர் மாவட்டம் வாஞ்சி நாதர் ஆலயத்தில் கார்த்திகை மாத கடை ஞாயிறு தீர்த்தவாரி கோலாகலமாக நடைபெற்றது. கோவிலில் உள்ள குப்த கங்கை திருக்குளத்தில் நடைபெற்ற தீர்த்தவாரியில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் புனித நீராடினர்.;
முன்னதாக அபிஷேக ஆராதனைகளுக்கு பிறகு வள்ளி,தேவசேன சமேத முருகப்பெருமான், விநாயகர் மற்றும் சண்டிகேஸ்வரர் சுவாமிகள் நான்கு வீதிகளில் வலம் வந்து நடவாகன மண்டபத்தில் எழுந்தருளினர். அக்கோவிலில் தனிசன்னதியில் அருள்பாலிக்கும் எமதர்மராஜா மற்றும் சித்திர குப்தனையும் பக்தர்கள் தரிசனம் செய்து சென்றனர்.