ராம்குமார் மரணம் தொடர்பான வழக்கு - பிரேத பரிசோதனை செய்த மருத்துவரிடம் விசாரணை

சுவாதி வழக்கில் ராம்குமாரின் உடலை பிரேத பரிசோதனை செய்த மருத்துவரிடம் மனித உரிமை ஆணையம் விசாரணை நடத்தியது.

Update: 2021-10-28 08:21 GMT
சுவாதி வழக்கில் ராம்குமாரின் உடலை பிரேத பரிசோதனை செய்த மருத்துவரிடம் மனித உரிமை ஆணையம் விசாரணை நடத்தியது. 
2016ல் நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சுவாதி வழக்கில் நெல்லையை சேர்ந்த ராம்குமார் கைது செய்யப்பட்டார். இதனிடையே சிறையில் அடைக்கப்பட்ட அவர், மின்சார வயரை கடித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது. இதில் பல எதிர்வினைகளும் எழுந்த நிலையில் வழக்கு தொடர்பாக மனித உரிமை ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் கடந்த ஆகஸ்ட் மாதம் காவல்துறை, சிறைத்துறை, மருத்துவர்கள் என பலரும் சென்னை மனித உரிமை ஆணையத்தில் ஆஜராகி வழக்கு தொடர்பான விவரங்களை தெரிவித்தனர். அப்போது ராம்குமார் மின்சார வயரை கடித்து தற்கொலை செய்து கொண்டதற்கான எந்த ஆதாரங்களும் இல்லை என அறிக்கை அளிக்கப்பட்டது. இதில் 2ஆம் கட்ட விசாரணைக்காக மனித உரிமை ஆணையம் முன்பாக ராம்குமாருக்கு பிரேத பரிசோதனை செய்த மருத்துவர் செல்வக்குமார் ஆஜரானார். அப்போது மனித உரிமை ஆணையம் தரப்பில் முன் வைக்கப்பட்ட பல கேள்விகளுக்கும் அவர் பதிலளித்ததாக கூறப்படுகிறது. 

Tags:    

மேலும் செய்திகள்