நிரம்பிய குமரி அணைகள் - 25,738 கன அடி நீர் வெளியேற்றம்

கன்னியாகுமரி மாவட்ட அணைகளில் இருந்து 25 ஆயிரத்து 738 கன அடி உபரி நீர் திறக்கப்படுவதால் தாமிரபரணி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Update: 2021-10-17 07:31 GMT
குமரியில் பெய்யும் தொடர் கனமழையால், பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றார் 1 மற்றும் சிற்றார் 2 அணைகள் முழுக்கொள்ளளவை எட்டும் நிலையில் உள்ளன. இதனால் உபரி நீர் வெளியேற்றம் தொடர்ந்து வருகிறது. பேச்சிப்பாறை அணையில் இருந்து 15 ஆயிரத்து 18 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. பெருஞ்சாணி அணையில் இருந்து 8 ஆயிரத்து 854 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. அதேபோல், சிற்றார் 1ல் இருந்து ஆயிரத்து 1196 கன அடி தண்ணீரும், சிற்றார் 2ல் இருந்து 2 ஆயிரத்து 670 கன அடி நீரும் வெளியேற்றப்படுகிறது. மொத்தம் 4 அணைகளில் இருந்தும் 25 ஆயிரத்து 738 கன அடி உபரி நீர் திறக்கப்படும் காரணத்தால் தாமிரபரணியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வெள்ளம் கடந்து செல்லும் சாலைகளில் போக்குவரத்திற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்