சூரியசக்தி மின்தகடுகள் ஏற்றி வந்த லாரி - வணிகவரித்துறை அதிகாரிகள் சோதனை

மும்பையில் இருந்து திருநெல்வேலிக்கு உரிய ஆவணங்களின்றி சூரிய சக்தி மின்தகடுகள் ஏற்றி வந்த லாரிக்கு 32 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

Update: 2021-09-25 07:48 GMT
மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் இருந்து 6 கோடி மதிப்பிலான சூரிய சக்தி மின்தகடுகளை ஏற்றிய லாரி, திருநெல்வேலி நோக்கி சென்றுக் கொண்டிருந்தது. மதுரை கருப்பாயூரணி சந்திப்பு பகுதியில் வணிகவரித்துறை அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். உரிய ஆவணங்களின்றி சூரிய சக்தி மின்தகடுகள் ஏற்றி வந்தது தெரியவந்தது. இதையடுத்து வரியாக 32 லட்சம் ரூபாய், அபராதமாக 32 லட்சம் ரூபாய் என மொத்தம் 64 லட்சம் ரூபாய் வசூலிக்கப்பட்டதை அடுத்து லாரியை அதிகாரிகள் விடுவித்தனர்.


Tags:    

மேலும் செய்திகள்