திருட்டு வீடியோ தொடர்பாக 122 வழக்குகள் - சட்டப்பேரவையில் செய்தித்துறை தகவல்

திருட்டு வீடியோ தடுப்பு பிரிவு மூலம் நடப்பாண்டில் 122 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2021-09-06 14:55 GMT
திருட்டு வீடியோ தடுப்பு பிரிவு மூலம் நடப்பாண்டில் 122 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சட்டமன்றத்தில் வெளியிட்ட தகவலில், திருட்டு வீடியோ தொடர்பாக 2010ம் ஆண்டு முதல் இதுவரை 32 ஆயிரத்து 719 வழக்குகள் பதிவு செய்துள்ளதாகவும், 54  லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. இதேபோல், கேபிள் தொலைக்காட்சி நடத்துபவர்கள் மீது 2 வழக்குகளும், புதிய தமிழ் திரைப்படங்களை சட்டவிரோதமாக கம்பிவடத் தொலைக்காட்சி இணைப்பில் ஒளிபரப்பியதாக 37 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும், கம்பிவட தொலைக்காட்சி சட்டத்தில் உள்ள விதிமுறைகளை மீறுவோர் மீது  கடுமையான நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல் ஆணையர்களுக்கு அறிவுறுத்தியுள்ளதையும் செய்தித்துறை குறிப்பிட்டுள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்