தொழிற்கல்வி படிப்பு அரசு மாணவர்களுக்கு சலுகை - தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் தகவல்

மாணவர்களுக்கான, பொறியியல் சேர்க்கை அட்டவணையில் எவ்விதமான மாற்றமும் இருக்காது என தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் தெரிவித்துள்ளது.

Update: 2021-08-04 14:56 GMT
பொறியியல், வேளாண்மை, சட்டம், மீன்வளம், பட்டப் படிப்பு உள்ளிட்ட தொழிற்கல்வி படிப்புகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 விழுக்காடு தனி இட ஒதுக்கீடு அளிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த நிலையில் பொறியியல் சேர்க்கைக்கான அட்டவணை ஏற்கனவே வெளியிடப்பட்ட நிலையில்,  தற்போதைய அரசு அறிவிப்பு காரணமாக அட்டவணையில் மாற்றம் வருமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 
இது குறித்து விளக்கம் அளித்துள்ள தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம், ஏற்கனவே வெளியிட்ட அட்டவணைப்படி அனைத்து பணிகளும் நடைபெறும் எனவும், இதில் எந்தவிதமான மாற்றங்களும் இருக்காது  என கூறியுள்ளது. 
அதன்படி வரும் 24ஆம் தேதி வரை ஆன்லைன் வழியில்  மாணவர்கள் பதிவு செய்யலாம் என்றும் , 25 ஆம் தேதி ரேண்டம் எண் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 4ஆம் தேதி தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும் எனவும், செப்டம்பர் ஏழாம் தேதி முதல் பொறியியல் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நடைபெறும் எனவும் தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் தெரிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்