தமிழகத்தில் 11 புதிய மருத்துவ கல்லூரிகள் : "இந்த ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்" - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை

தமிழகத்தில், 11 புதிய மருத்துவ கல்லூரிகளில் இந்த ஆண்டு மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அறிவுறுத்தி உள்ளது.

Update: 2021-07-30 14:27 GMT
தமிழகத்தில், 11 புதிய மருத்துவ கல்லூரிகளில் இந்த ஆண்டு மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அறிவுறுத்தி உள்ளது.  2020-21 ஆம் ஆண்டு மருத்துவ படிப்பு கலந்தாய்வில், புதிதாக கட்டப்பட்டுள்ள 11 அரசு மருத்துவ கல்லூரிகள் சேர்க்கப்படும் என தமிழக அரசு கடந்த 2019ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அறிவித்தது. இந்நிலையில், அந்த அறிவிப்பை செயல்படுத்த கோரி பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை ஏற்கனவே விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வு, தீர்ப்பை ஒத்தி வைத்திருந்தது. இந்நிலையில், இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதிகள், 11 புதிய மருத்துவ கல்லூரிகளில் உட்கட்டமைப்பு வசதிகளை விரைவாக செய்து முடிக்க அரசுக்கு அறிவுறுத்தியது. இந்த கல்லூரிகளில், இந்த ஆண்டு தலா 150 மாணவர்களை சேர்ப்பதர்கான நடவடிக்கைகளை  தமிழ்நாடு அரசு எடுக்க வேண்டும் எனக்கூறி வழக்கை முடித்து வைத்தனர். 



Tags:    

மேலும் செய்திகள்