"ஆக்சிஜன் தடையில்லாமல் கிடைப்பதை உறுதி செய்க" - மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

தமிழகத்திற்கு தேவையான ஆக்சிஜன் தடையில்லாமல் வழங்கப்படுவதை நாளைக்குள் உறுதிசெய்ய வேண்டும் என்று மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

Update: 2021-05-06 16:28 GMT
தமிழகத்திற்கு தேவையான ஆக்சிஜன் தடையில்லாமல் வழங்கப்படுவதை நாளைக்குள் உறுதிசெய்ய வேண்டும் என்று மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான வழக்கு விசாரணையின் போது மத்திய அரசு ஒதுக்கீடு செய்த 475 டன் ஆக்சிஜன் மே 2 விடுவிக்கப்படவில்லை என்றும் செங்கல்பட்டில் மரணமடைந்த 13 பேரும் கொரோனா தொற்று இல்லாத நோயாளிகள் எனவும் சுகாதார செயலாளர் ஜெ. ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்,. அப்போது கேரளா கஞ்சிக்கோடு உற்பத்தியாகும் 40 டன் ஆக்சிஜன் தமிழக தென் தமிழகத்திற்கு தொடர்ந்து வழங்கிய நிலையில் நிறுத்தப்பட்டுள்ளது என்றும் அதனை  மீண்டும் வழங்க வேண்டும் எனவும் தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகத்தின் நிர்வாக இயக்குனரும் உமாநாத் தெரவித்தார். மேலும், கையிருப்பு சிலிண்டர்கள் நாளை வரை மட்டுமே இருக்கும் என்பதால் சனிக்கிழமை நிலமை மோசமாகும் என்றும் அப்போது தெரிவிக்கப்பட்டது,.

அப்போது ஆக்சிஜன் ஒதுக்குவதில் எவ்வித குறைபாடும் இல்லை  என்று மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது,.  மேலும் ரெம்டெசிவிர் உற்பத்தியை அதிகரிக்க  மேலும் 7 நிறுவனங்களை இந்த வார இறுதியில் அனுமதிக்க இருக்கிறோம்  என்றும் சொல்லப்பட்டது,. பின்னர், தமிழகத்திற்கு தேவையான ஆக்சிஜன் தடையில்லாமல் வழங்கப்படுவதை நாளைக்குள் உறுதிசெய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்

Tags:    

மேலும் செய்திகள்