ஒன்றிய தலைவர் தேர்தலை நடத்துமாறு மனு - அதிமுகவுக்கு பெரும்பான்மை இல்லை

தேனி மாவட்டம் பெரியகுளம் ஒன்றிய தலைவர் பதவிக்கான தேர்தல், பிப்ரவரி 15ஆம் தேதிக்கு முன் நடத்தப்படும் என, தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Update: 2021-01-28 11:31 GMT
தேனி மாவட்டம் பெரியகுளம் ஒன்றிய தலைவர் பதவிக்கான தேர்தல், பிப்ரவரி 15ஆம் தேதிக்கு முன் நடத்தப்படும் என, தமிழக அரசு தெரிவித்துள்ளது.பெரியகுளம் ஊராட்சி ஒன்றிய தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவிக்கான தேர்தலை உடனடியாக நடத்தக் கோரி திமுக கவுன்சிலர் தங்கவேல், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு செய்தார். ஜனவரி 6ஆம் தேதி அனைவரும் பொறுப்பேற்ற நிலையில், ஜனவரி11 ல் தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல் நடப்பதாக அறிவித்து பின் பலமுறை ஒத்தி வைக்கப்பட்டதாக புகார் கூறினார்.  மொத்தம் உள்ள 16 கவுன்சிலர்களில் திமுகவுக்கு 7 பேரும், அமமுக ஒருவரும் உள்ளதாகவும், அதிமுகவுக்கு பெரும்பான்மை இல்லாததால், தேர்தல் நடத்தாமல் இழுத்தடிப்பு செய்வதாக கூறியுள்ளார். மனு மீதான விசாரணையில், பிப்ரவரி 15ஆம் தேதிக்குள் தேர்தல் நடத்தப்படும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை பதிவு செய்துகொண்ட நீதிபதி, தேர்தல் நடத்த தேவையான போலீஸ் பாதுகாப்பு வழங்கவும், முழுமையாக வீடியோ பதிவு செய்யவும் உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

Tags:    

மேலும் செய்திகள்