அண்ணா பல்கலை. தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி வெங்கடேசன் நேரில் ஆஜராக உத்தரவு

துணைவேந்தர் சூரப்பா விவகாரத்தில், உரிய ஆவணங்களுடன் அண்ணா பல்கலைக் கழக தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் நேரில் ஆஜராகு ஒரு நபர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

Update: 2020-12-23 08:03 GMT
அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் மீது 280 கோடி ரூபாய் ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு உத்தரவின்படி ஓய்வு பெற்ற நீதிபதி கலையரசன் தலைமையிலான குழுவினர் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணை தொடர்பாக ஏற்கனவே அண்ணா பல்கலைக்கழகம் பல்வேறு ஆவணங்களை நீதிபதியிடம் வழங்கியுள்ளது. 
இந்நிலையில் பல்கலைக்கழக தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் வெங்கடேசன் , வரும் திங்கள் அன்று நேரில் ஆஜராக வேண்டும் என விசாரணை குழு உத்தரவிட்டுள்ளது. அன்று வெங்கடேசன் உள்ளிட்ட சில அதிகாரிகளிடம் விசாரணை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Tags:    

மேலும் செய்திகள்