அரையாண்டு தேர்வு நடத்துவதற்கான வழிமுறைகளை வெளியிட்டது பள்ளிக்கல்வித்துறை

தனியார் பள்ளிகள் அரையாண்டு தேர்வுகளை நடத்துவதற்கான வழிமுறைகளை பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

Update: 2020-12-18 12:07 GMT
கொரோனா பரவல் காரணமாக இந்த ஆண்டு பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு ஏற்கனவே ரத்து செய்யப்பட்டிருந்த நிலையில்,  அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு  அரையாண்டு தேர்வும்
ரத்து செய்யப்படுவதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்திருந்தார். ஆனால் தனியார் பள்ளிகள் விரும்பினால் அரையாண்டு தேர்வை நடத்தி கொள்ளலாம் என்றும் அவர் தெரிவித்திருந்தார் .இதனையடுத்து தனியார் பள்ளிகள், ஆன்லைனில் தேர்வு நடத்துவதற்கான நடவடிக்கைகளை தொடங்கியுள்ளன. அதற்கான பல்வேறு அறிவுறுத்தல்களை பள்ளி கல்வித்துறை வழங்கியுள்ளது. அதன்படி  நடத்தப்பட்ட பாடங்களுக்கு மட்டும் தேர்வுகளை நடத்த வேண்டும் என்றும், அரையாண்டு தேர்வில்  வரும் மதிப்பெண்களை வைத்து, மாணவர்களின் தேர்ச்சி தொடர்பான முடிவுகளை எடுக்கக்கூடாது என்றும்  பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.
மேலும், தேர்வுக்கு தனியாக கட்டணம் வசூலிக்க கூடாது என்றும் பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்