அரசு வேலை கோரிய மாற்றுத்திறனாளி வீரர்கள் - உரிய அங்கீகாரம் கொடுங்கள் - நீதிபதிகள் உத்தரவு

சர்வதேச அளவில் பதக்கங்களை வென்ற மாற்றுத்திறனாளி வீராங்கனைகளுக்கு உரிய அங்கீகாரம் வழங்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

Update: 2020-11-27 14:32 GMT
மதுரை சொக்கிக்குளம் பகுதியை சேர்ந்த ராஜகுமாரி,  உயர்நீதிமன்ற மதுரைகிளையில் தாக்கல் செய்த மனுவில், மாற்றுத்திறனாளி விளையாட்டு வீராங்கணைகளான சங்கீதா, தீபா ஆகியோருக்கு அரசு வேலை வழங்க கோரியிருந்தார். தடகள வீராங்கனைகளான தீபா, சங்கீதா ஆகியோர், தேசிய, மாநில, மாவட்ட அளவிலான போட்டிகளில் பங்கேற்று 84 பதக்கங்களை பெற்றுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியா மட்டுமல்லாது, ஜெர்மன், மலேசியா, லண்டன், துபாய் , சீனா என பல நாடுகளுக்கு சென்று, தாய்மண்ணுக்கு பெருமை சேர்த்தவர்களுக்கு அரசு பணி வழங்க வேண்டுகோள் வைக்கப்பட்டது. இந்த மனுவை விசாரித்த கிருபாகரன், புகழேந்தி அமர்வு, இருவருக்கும் உரிய அங்கீகாரம் வழங்க அரசுக்கு உத்தரவிட்டது. நிரந்தர அரசு வேலை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்திற்கு உத்தரவிட்ட நீதிபதிகள், டிசம்பர் 17 ஆம் தேதி பதில் மனு தாக்கல் செய்ய  ஆணையிட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்