கோயில் நிலத்தை காவல்துறைக்கு மாற்ற எதிர்ப்பு - 5 கிராமங்களை சேர்ந்த கிராம மக்கள் போராட்டம்
திருப்பூரில் கோவில் நிலத்தை வேறு துறைக்கு மாற்றுவதை கண்டித்து 2500க்கும் மேற்பட்ட மக்கள் சாலையோரம் அமர்ந்து கும்மி ஆட்டம் ஆடி கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.;
திருப்பூர் மாநகராட்சி உட்பட்ட பகுதியில், 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற ஆண்டிபாளையம் மாரியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு சொந்தமான 11.24 ஏக்கர் நிலத்தை காவலர்களுக்கான குடியிருப்பு கட்ட காவல் துறைக்கு மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனை கண்டித்து 5 கிராமங்களை சேர்ந்த 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள், ஆண்டிபாளையம் பிரிவு பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையை அடுத்து சாலையோரம் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.