நாகை : கடல் சீற்றம் - 2வது நாளாக மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை

நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த ஆறுகாட்டுத்துறை கோடியக்கரை, மணியன் தீவு, புஷ்பவனம், வெள்ளப்பள்ளம் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர்.

Update: 2020-10-10 10:05 GMT
நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த  ஆறுகாட்டுத்துறை கோடியக்கரை,  மணியன் தீவு, புஷ்பவனம், வெள்ளப்பள்ளம் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள்  மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். இந்த நிலையில் வங்கக் கடலில் நிலை  கொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக மீன்துறை அதிகாரிகள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவித்துள்ளனர். மேலும் வேதாரண்யம் பகுதி கடற்கரை கிராமங்களில் கடல் அலை சீற்றம் அதிக அளவில் காணப்படுகிறது. இதனால்  இரண்டாவது நாளாக மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லவில்லை. இதனால் மீன் வர்த்தகம்  முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது

Tags:    

மேலும் செய்திகள்