மூடப்பட்டிருந்த கோயம்பேடு சந்தை மீண்டும் திறப்பு

கொரனோ நோய் தொற்று காரணமாக மூடப்பட்ட சென்னை கோயம்பேடு காய்கறி மொத்த விற்பனை அங்காடி இன்று இரவு முதல் மீண்டும் செயல்பட துவங்கியது.

Update: 2020-09-27 16:20 GMT
கொரனோ நோய் தொற்று பரவல் காரணமாக கடந்த மே மாதம் கோயம்பேடு காய்கறி கடைகள் , பழம் , மலர் அங்காடிகள் தற்காலிகமாக மூட தமிழக அரசு உத்தரவிட்டது.இதனை தொடர்ந்து காய்கறிகள் மார்க்கெட் திருமழிசை பகுதிக்கும் , பழ அங்காடி  மாதவரம் புறநகர் பேருந்து நிலையத்திற்க்கும் மாற்றப்பட்டது. இந்நிலையில், வியாபாரிகளின் கோரிக்கைக்கு ஏற்ப தமிழக அரசு மீண்டும் கோயம்பேடு மார்க்கெட் திறக்க அனுமதி அளித்தது. 
இதனால், கோயம்பேடு மார்க்கெட்  அங்காடியை  முதன்மை அலுவலர் கோவிந்தராஜூ திறந்து வைத்தார். கடையின் உரிமையாளர்கள், தங்களது கடைகளுக்கு வர்ணம் பூசி, பூஜைகள் செய்து கடைகளை திறந்தனர். சுமை தூக்கும் தொழிலாளர்களும் உற்சாகமாக மீண்டும் பணிக்கு திரும்பி உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்