வேலூர் மாவட்டத்தில் பிரதமரின் கிசான் நிதி உதவி திட்டத்தில் மோசடி - ரூ.70 லட்சம் மீட்பு

வேலூர் மாவட்டத்தில் பிரதமரின் கிசான் நிதி உதவி திட்டத்தில் மோசடி செய்த நபரை, சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர்.

Update: 2020-09-17 17:06 GMT
வேலூர் மாவட்டத்தில்  பிரதமரின் கிசான் நிதி உதவி திட்டத்தில் மோசடி செய்த நபரை, சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையை சேர்ந்த சந்தோஷ் என்பவர் வேலூர் திருவலத்தில் கணினி மையத்தில் தங்கியிருந்து பொது மக்களின் ஆதார் உள்ளிட்ட விவரங்களை பெற்று கிசான் திட்டத்தில் பதிவு செய்து முறைகேட்டில் ஈடுபட்டது விசாரணையில் தெரிய வந்துள்ளது. போலியான முகவரி கொடுத்து பணம் பெற்ற நபர்களின் வங்கிக் கணக்குகள், முடக்கப்பட்டு ஒரு கோடி​யே 20 லட்ச ரூபாயில், தற்போது 70 லட்சம் ரூபாய் வரை வேளாண் அதிகாரிகளால் திரும்பப் பெறப்பட்டுள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்