புதிய ஆட்சியர் அலுவலக கட்டிடம் அமைவதில் நீடிக்கும் குழப்பம் - இடம் தேர்வு செய்யப்பட்ட பிறகு வேறு இடங்களில் ஆய்வு

தென்காசி மாவட்ட புதிய ஆட்சியர் அலுவலக கட்டிடம் அமைப்பது தொடர்பாக பல்வேறு குழப்பங்கள் நீடித்து வருகின்றன.

Update: 2020-09-17 10:55 GMT
தென்காசி மாவட்டத்தின் புதிய ஆட்சியர் அலுவலக கட்டிடம் அமைப்பதற்கு தென்காசி அருகே உள்ள மேலகரம் பேரூராட்சிக்கு சொந்தமான இடம் தேர்வு செய்யப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்த பணிக்காக 116 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த இடத்தில் ஆட்சியர் கட்டிடம் அமைப்பதற்கு திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இதுதொடர்பாக திமுக மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் மற்றும் மதிமுகவை சேர்ந்த உதயசூரியன் ஆகியோர் மதுரை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இதற்கிடையே, மாவட்ட ஆட்சியர் கட்டிடம் அமைப்பதற்கு தென்காசி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, அரசு மாவட்ட தலைமை அரசு மருத்துவமனை வளாகம், கொடிக்குறிச்சி, பாட்டா குறிச்சி உள்ளிட்ட 10 இடங்களை வருவாய் நிர்வாக ஆணையர் பணீந்திர ரெட்டி ஆய்வு செய்தனர். அரசு நிதி ஒதுக்கீடு செய்து இடம் தேர்வு செய்யப்பட்ட பிறகு வேறு இடங்களை ஆய்வு செய்து வருவதால் அதிகாரிகள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
---

Tags:    

மேலும் செய்திகள்