அடையாறு, கூவம் ஆற்றில் சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் கலப்பதை தடுக்க உரிய கண்காணிப்பு முறை

முறையாக சுத்திகரிக்கப்படாமல் அடையாறு, கூவம் ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்க உரிய கண்காணிப்பு முறை ஏற்படுத்த வேண்டும் என தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

Update: 2020-09-11 03:17 GMT
கடந்தாண்டு டிசம்பரில் மெரினாவில் நுரைகள் உருவானது  குறித்து தானாக முன் வந்து வழக்குப் பதிவு செய்த தேசிய பசுமை தீர்ப்பாயம் பல்வேறு முக்கிய உத்தரவுகள் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. இந்த விவகாரத்தில் ஏற்கனவே அறிக்கை சமர்ப்பித்த குழு அடையாறு, கூவம் உள்ளிட்ட கடலில் கலக்கும் முக்கிய ஆறுகளில் கழிவுநீர் கலப்பது, தோல் பதனிடும் தொழிற் சாலை கழிவு நீர் கலப்பது  உள்ளிட்ட காரணங்களால் நுரை ஏற்பட்டு இருக்கலாம் என  பல்வேறு அம்சங்களை  சுட்டிக் காட்டியிருந்தது. தமிழ்நாடு மற்றும் தேசிய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் இந்த விவகாரத்தில் கூட்டாக இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.  இதற்காக உரிய கண்காணிப்பு முறையை தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டுவாரியம் ஏற்படுத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. மேலும்,  நீர் வழித்தடங்களை அகலம் மற்றும் ஆழப்படுத்த வேண்டும் எனவும், கழிவு நீரை சுத்திகரிக்க புதிய தொழில்நுட்பங்களை கையாள வேண்டும் எனவும் தனது உத்தரவில் தெரிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்