அரியலூர் மாணவன் தற்கொலை : "குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை" - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

அரியலூர் மாணவன் விக்னேஷ் நீட் தேர்வு காரணமாக தற்கொலை செய்து கொண்ட சம்பவத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.;

Update: 2020-09-10 09:28 GMT
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மாணவன் விக்னேஷ் தற்கொலை செய்து கொண்ட செய்தி அறிந்து, மிகுந்த துயரத்துக்கு ஆளானதாக தெரிவித்துள்ளார். அவரது குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி,  7 லட்ச ரூபாய் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்க உத்தரவிட்டுள்ளதாக கூறி உள்ளார். மேலும், விக்னேஷின் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவருக்கு கல்வி தகுதிக்கேற்ப அரசு மற்றும் அரசு சார்ந்த பணி வழங்கப்படும் என்றும் அதில் தெரிவித்துள்ளார். மாணவர்கள் இதுபோன்ற  விபரீத முடிவுகளை எடுப்பது, தமக்கு மிகுந்த வேதனை அளிப்பதாக தெரிவித்துள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, எதையும் எதிர்கொள்ளும் மன உறுதியையும், விடா முயற்சியையும் மாணவர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்