சுங்க கட்டணம் ரத்து- நீதிமன்றம் எச்சரிக்கை

நெடுஞ்சாலை சுங்கச் சாவடிகளில் வசூலிக்கப்படும் சுங்க கட்டணம் ரத்து செய்ய உத்தரவிடும் நிலை வரும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை எச்சரிக்கை விடுத்துள்ளது.

Update: 2020-08-29 03:59 GMT
நெடுஞ்சாலை சுங்கச் சாவடிகளில் வசூலிக்கப்படும் சுங்க கட்டணம் ரத்து செய்ய உத்தரவிடும் நிலை வரும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை எச்சரிக்கை விடுத்துள்ளது. நெடுஞ்சாலைத்துறையின் சாலை விரிவாக்கம் உள்ளிட்ட பணிகளுக்காக மரங்களை வெட்டும்போது, உச்சநீதிமன்றத்தில் கூறியபடி, 1 மரம் வெட்டப்பட்டால் 10 மரக்கன்றுகள் நடப்படும் என்ற உறுதிமொழியை பின்பற்றவில்லை என்று நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர். இதனால்,சுற்றுச்சூழல் மிகவும் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டு உள்ளதாகவும், இதே நிலை நீடித்தால், நெடுஞ்சாலை சுங்கச் சாவடிகளில் வசூலிக்கப்படும் சுங்க கட்டணம் ரத்து செய்ய உத்தரவிடும் நிலை வரும் எனவும் உயர்நீதிமன்ற மதுரை கிளை  நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்தனர்.
Tags:    

மேலும் செய்திகள்