பட்டப்பகலில் இருசக்கர வாகனம் திருட்டு - சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை

விருத்தாச்சலத்தில் பட்டப்பகலில் இருசக்கர வாகனத்தை திருடிச் சென்றவரை போலீசார் தேடி வருகின்றனர்.

Update: 2020-08-18 08:28 GMT
விருத்தாச்சலத்தில் பட்டப்பகலில் இருசக்கர வாகனத்தை திருடிச் சென்றவரை போலீசார் தேடி வருகின்றனர். பெண்ணாடத்தை சேர்ந்த முகமது ரபிக் என்பவர் மளிகை கடை நடத்தி வரும் நிலையில் தன் கடையின் முன் இருசக்கர வாகனத்தை நிறுத்தி வைத்துள்ளார். அப்போது கடைக்கு வந்த மர்மநபர் ஒருவர், பொருட்கள் வாங்குவது போல நடித்து அங்கிருந்த இருசக்கர வாகனத்தை திருடிச் சென்றார். இந்த சம்பவம் அனைத்தும் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்த நிலையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
Tags:    

மேலும் செய்திகள்