செல்போன் வெடித்து தீ விபத்து - வீட்டில் உறங்கி கொண்டிருந்த தாய், 2 மகன்கள் உயிரிழப்பு

கரூர் அருகே வீட்டில் சார்ஜ் போடப்பட்டிருந்த செல்போன் வெடித்ததால் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி தாய் மற்றும் மகன்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2020-08-10 07:25 GMT
கரூர் மாவட்டம் ராயனூர் பகுதியில் 29 வயதான முத்துலட்சுமி என்ற பெண் கணவர் பிரிந்து சென்ற நிலையில் 2 ஆண் குழந்தைகள் மற்றும் பெற்றோருடன் வசித்து வந்தார். கணவர் பிரிந்து சென்ற நிலையில் கடன் பிரச்சினையில் முத்துலட்சுமி தவித்து வந்ததாக கூறப்படுகிறது. பண தேவையை சரி செய்ய தனது பெற்றோரை முத்துலட்சுமி சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தததாக கூறப்படுகிறது. இரவில் செல்போனுக்கு சார்ஜ் போட்டுவிட்டு அதன் அருகிலேயே முத்துலட்சுமி உறங்கியதாக தெரிகிறது. விடிய விடிய சார்ஜ் ஏறிய செல்போன் திடீரென வெடித்துள்ளது. இதில் முத்துலட்சுமி உடலில் தீ பற்றி எரிய அவர் அலறி துடித்துள்ளார். சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற போது உடல் முழுவதும் எரிந்த நிலையில் முத்துலட்சுமி கருகி நிலையில் உயிரிழந்து கிடந்தார். வீடு முழுவதும் ஏற்பட்ட புகையினால் முத்துலட்சுமியின் 2 வயது மற்றும் 3 வயது ஆண் குழந்தைகளுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. அவர்களை மீட்டு கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவர்கள் வழியிலேயே உயிரிழந்தனர். இச்சம்பவம் குறித்து  தான்தோன்றிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடன் பிரச்சினையில் முத்துலட்சுமி சிக்கி தவித்ததால் மரணத்திற்கு வேறு ஏதாவது காரணமா என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்