இன்று கூடுகிறது, தமிழக அமைச்சரவை - நீட் தேர்வு குறித்து முக்கிய முடிவு என தகவல்

இன்று நடைபெறும் தமிழக அமைச்சரவை கூட்டத்தில் நீட் தேர்வு விவகாரம் தொடர்பாக முக்கிய முடிவுகள் எடுக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Update: 2020-07-14 06:09 GMT
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில், வரும் செப்டம்பர் 13-ம் தேதி நடைபெற உள்ள நீட்தேர்வை, கொரோனா பாதிப்பு குறைந்த பின் நடத்தலாம் என பிரதமருக்கும் கோரிக்கை வைப்பது தொடர்பாக  முடிவு எடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல், இந்தாண்டு மட்டும் 12-ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கை நடத்து என்றும், அல்லது மாநில அளவிலேயே ஒரு நுழைவுத்தேர்வு நடத்துவது குறித்து முடிவு எடுக்கலாம் என, தகவல் வெளியாகி உள்ளது. நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற அரசு பள்ளி மாணவர்களுக்கு 10  சதவிகிதம் இடஒதுக்கீடு அளிப்பது குறித்தும் அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.  

Tags:    

மேலும் செய்திகள்