கல்லூரி செமஸ்டர் தேர்வு விவகாரம்:"மாநில அரசு முடிவெடுக்க அதிகாரம் தேவை" - முதலமைச்சர் பழனிசாமி

கல்லூரி செமஸ்டர் தேர்வுகள் குறித்து மாநில அரசுகளே முடிவெடுக்க அதிகாரம் வழங்க வேண்டும் என முதலமைச்சர் பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

Update: 2020-07-11 05:32 GMT
இது தொடர்பாக மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலுக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார். அதில், பெரும்பாலான கல்லூரிகள், விடுதிகள் கொரோனா மையங்களாக மாற்றப்பட்டுள்ள நிலையில், செப்டம்பருக்குள் செமஸ்டர் தேர்வு நடத்த முடியாத சூழல் இருப்பதாக முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார். ஊரடங்கு கட்டுப்பாடுகளால் மாணவர்கள் தேர்வு மையங்களுக்கு செல்ல முடியாத நிலை உருவாகியிருப்பதாகவும், ஆன்லைன் வாயிலாக பருவத்தேர்வுகளை நடத்துவதில் நடைமுறை பிரச்சினைகள் இருப்பதாகவும் அவர் விளக்கம் அளித்துள்ளார். எனவே, கல்லூரி செமஸ்டர் தேர்வு குறித்து முடிவு எடுக்கும் அதிகாரத்தை மாநில அரசுகளுக்கு வழங்க வேண்டும் என முதலமைச்சர் பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்