மணல் திருட்டால் பள்ளமாகிய கண்மாய் - மணல் வாகனங்கள் தடுத்தி நிறுத்தி இளைஞர்கள் போராட்டம்

மணல் திருட்டால் கண்மாய் பள்ளமாகி வயல் காடுகள் மேடானதால் வேதனையடைந்த இளைஞர்கள் மணல் வாகனங்களை தடுத்து நிறுத்தி போராட்டம் நடத்தினர்.

Update: 2020-07-10 13:05 GMT
சிவகங்கை அருகே சாமியார்பட்டியில் வாழும் மக்கள்  விவசாயத்தை அதிகளவு நம்பியுள்ளனர். அந்த பகுதியில் உள்ள 5 கண்மாய்கள் தான்  விவசாயத்துக்கு நீர் ஆதாரமாக உள்ளது .. இந்நிலையில் கண்மாய்களில் பெரிய அளவில் பள்ளம் தோண்டி கிராவல் மண் அள்ளப்படுகிறது. சட்ட விரோதமாக மணல் அள்ளப்பட்டதால் கண்மாய் பள்ளம் ஆனது .. வயல் காடுகள் மேடானது.. விவசாயம் பாதித்ததால் வேதனை அடைந்த இளைஞர்கள் மணல் அள்ள வந்த வாகனங்களை தடுத்து நிறுத்தி விரட்டினர்.  தொடர்ந்து மண் அள்ளினால் சாலைமறியலில்  ஈடுபடப் போவதாக  அவர்கள் எச்சரித்துள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்