எல்லையில் உயிர் நீத்த ராணுவ வீரர்களுக்கு காங்கிரஸ் அஞ்சலி

அண்மையில் இந்திய, சீன எல்லையில் உயிர் நீத்த ராணுவ வீரர்களுக்கு, சிதம்பரம் அருகே கீரப்பாளையத்தில் காங்கிரஸ் கட்சியினர் அஞ்சலி செலுத்தினர்.

Update: 2020-06-26 10:32 GMT
அண்மையில் இந்திய, சீன எல்லையில் உயிர் நீத்த ராணுவ வீரர்களுக்கு, சிதம்பரம் அருகே கீரப்பாளையத்தில்  காங்கிரஸ் கட்சியினர் அஞ்சலி செலுத்தினர்.  தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ்.அழகிரி உள்ளிட்டோர் இந்த நிகழ்வில் பங்கேற்று அஞ்சலி செலுத்தினர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கே.எஸ். அழகிரி, மத்திய அரசை பொறுப்பான எதிர்க் கட்சிகள் கேள்வி கேட்பதால் தேசத் துரோகி என ஆளும் கட்சியால் அழைப்பதாக குற்றம் சாட்டினார். எல்லையில் சீன ராணுவம் ஊடுருவவில்லை என பிரதமர்  சொல்கிறார் என்றும், அப்படியானால் இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் இறந்தது எப்படி என அழகிரி கேள்வி எழுப்பியுள்ளார். சாத்தான்குளம் சம்பவத்தில் போலீசாரின்  நடவடிக்கை கண்டிக்கதக்கது என்று தெரிவித்த கே.எஸ். அழகிரி, சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தினார்.  
Tags:    

மேலும் செய்திகள்