"கொரோனா தடுப்பு விவகாரத்தில், இறைவன் மீது பழி சுமத்த முயற்சிப்பதா?" - முதலமைச்சர் பழனிசாமிக்கு மு.க ஸ்டாலின் கண்டனம்

கொரோனா தடுப்பு விவகாரத்தில் முதலமைச்சர் பழனிசாமி இறைவன் மீது பழி சுமத்த முயற்சிப்பது கண்டிக்கத்தக்கது என தி.மு.க தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.;

Update: 2020-06-21 14:21 GMT
கொரோனா தடுப்பு விவகாரத்தில் முதலமைச்சர் பழனிசாமி இறைவன் மீது பழி சுமத்த முயற்சிப்பது கண்டிக்கத்தக்கது என தி.மு.க தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஐந்து கட்ட ஊரடங்குக்குப் பிறகும் கொரோனாவைக் கட்டுப்படுத்த முடியாமல் அரசு கைபிசைந்து நிற்பதாக விமர்சித்துள்ளார். கொரோனாவை மறைப்பதாலோ, எண்ணிக்கையை குறைத்துக் காட்டுவதாலோ  அரசு நல்ல பெயர் வாங்க முடியாது என்றும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 
Tags:    

மேலும் செய்திகள்