சேலம் : இ-பாஸ் பெறாமல் வந்த 17 பேர் மீது வழக்குப்பதிவு
சேலம் மாநகருக்குள் பிற மாவட்டம் மற்றும் மாநிலங்களில் இருந்து, இ-பாஸ் பெறாமல் வந்த 17 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையாளர் சதீஷ் தெரிவித்துள்ளார்.;
சேலம் மாநகருக்குள் பிற மாவட்டம் மற்றும் மாநிலங்களில் இருந்து, இ-பாஸ் பெறாமல் வந்த 17 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையாளர் சதீஷ் தெரிவித்துள்ளார். கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், சேலம் மாநகருக்குள் வருபவர்கள், மாவட்ட எல்லையில்
கொரோனோ பரிசோதனை செய்த பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர். இந்நிலையில் இ-பாஸ் இல்லாமல் வந்த 17 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்கள் 17 பேரும் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில், இவர்களில் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.