இந்தியாவின் தேசிய பாடலான வந்தே மாதரத்தின் 150வது ஆண்டை குறிக்கும் வகையில் நாளை நாடாளுமன்றத்தில் இது தொடர்பாக சிறப்பு விவாதம் நடத்தப்படவுள்ளது. அப்போது வந்தே மாதரம் பட பாடலின் பல முக்கிய மற்றும் குறைவாக அறியப்பட்ட வரலாற்று அம்சங்கள் முன்னிலைப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மக்களவையில் பிரதமர் மோடி இது தொடர்பான விவாதத்தை தொடங்கி வைப்பார் என்றும் மாநிலங்களவையில் அமித்ஷா இது தொடர்பான விவாதத்தை தொடங்கி வைப்பார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.