முதலமைச்சருடன் திமுக முன்னாள் எம்.பி. சந்திப்பு - முதல்வரை பாராட்டிய கே.பி.ராமலிங்கம்
சேலத்தில், திமுக நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினரும், முன்னாள் விவசாய அணி மாநில செயலாளருமான கே.பி.ராமலிங்கம், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசினார்.;
சேலத்தில், திமுக நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினரும், முன்னாள் விவசாய அணி மாநில செயலாளருமான கே.பி.ராமலிங்கம், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசினார். மேட்டூர் அணையில் உரிய நேரத்தில் தண்ணீர் திறந்ததற்காக நன்றி தெரிவித்த அவர், குடிமராமத்து பணிகளை சிறப்பாக செய்து வருவதாக பாராட்டு தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கே.பி.ராமலிங்கம், "ஒன்றிணைவோம் வா" திட்டம் மூலம் திமுக வசூல் வேட்டை நடத்தியுள்ளதாக குற்றம்சாட்டினார்.