200மீ பள்ளத்தில் கவிழ்ந்த லாரி.. பதற வைத்த விபத்து - களமிறங்கிய ராணுவம்
அருணாசலப் பிரதேசத்தில் 22 தொழிலாளர்களுடன் சென்ற லாரி ஒன்று 200 மீட்டர் ஆழ பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் இதுவரை 18 பேரின் சடலங்கள் கண்டறியப்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த எட்டாம் தேதி சாக்லாகாம் பகுதியில் இரவு நடந்த இந்த விபத்து தொடர்பாக லாரியில் பயணித்து உயிர் தப்பிய ஒரே நபர் அளித்த தகவலின் பேரில் ராணுவ உதவியுடன் மிகப்பெரிய தேடுதல் வேட்டையானது நடைபெற்று வருகிறது. தற்போது கண்டறியப்பட்டுள்ள உயிரிழந்தவர்களின் சடலங்களை மேலே கொண்டுவரும் பணியானது நடைபெற்று வருகிறது.