"ஜிஎஸ்டி இழப்பீடு தொகையை விரைந்து வழங்குங்கள்" - அமைச்சர் ஜெயக்குமார்

40வது சரக்குகள் மற்றும் சேவை வரி கூட்டத்தில், அமைச்சர் ஜெயக்குமார், நிலுவையில் உள்ள ஜி.எஸ்.டி. இழப்பீட்டு தொகையை மத்திய அரசு விரைந்து வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.;

Update: 2020-06-12 09:49 GMT
40-வது சரக்குகள் மற்றும் சேவை வரி கூட்டமானது இன்று காணொலி காட்சி மூலம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழகம் சார்பில் கலந்து கொண்ட அமைச்சர் ஜெயக்குமார், நிலுவையில் உள்ள 2017-18 ஆம் ஆண்டிற்கான ஜி.எஸ்.டி. இழப்பீட்டு தொகை ரூபாய் 4 ஆயிரத்து 73 கோடி ரூபாயையும்,  
2018-2019 ஆண்டிற்கு நிலுவையில் உள்ள 553 கோடி ரூபாயையும்,
2019-2020 ஆம் ஆண்டிற்கு நிலுவையிலுள்ள ஆயிரத்து 101  கோடியையும், மத்திய அரசு விரைந்து வழங்கிட வேண்டும் என வலியுறுத்தினார். தொடர்ந்து, இந்த கூட்டத்தில் ஜி.எஸ்.டி. நடைமுறைகளை எளிமைப்படுத்துவதற்கான மற்றும் மனிதர்களுக்கு பயனளிக்கக்கூடிய சட்டக்குழுவின் பல்வேறு பரிந்துரைகள் விரிவான விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.
Tags:    

மேலும் செய்திகள்