ரயில் முன்பதிவு கட்டணம் - திரும்ப பெறலாம்
ஊரடங்கு காரணமாக நாடு முழுவதும் ரயில்கள் இயக்கம் ரத்து செய்யப்பட்ட நிலையில், கவுன்ட்டர்களில் முன்பதிவு செய்தவர்களுக்கான கட்டணம் திரும்ப வழங்கப்படுகிறது.;
மார்ச் 31 ஆம் தேதி வரை டிக்கெட் முன்பதிவு செய்தோர், இன்று முதல் முன்பதிவு மையங்களுக்குச் சென்று தொகையை பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 1 முதல் 14 ம் தேதி வரையிலான டிக்கெட் கட்டணம் ஜூன் 12ம் தேதி முதல் வழங்கப்படும் என்றும், ஏப்ரல் 15 முதல் 30ம் தேதி வரையிலான டிக்கெட் கட்டணத்தை ஜூன் 19ஆம் தேதி முதல் பெறலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மே 1 முதல் 15ம் தேதி வரையிலான டிக்கெட் கட்டணம் ஜூன் 26 முதல் வழங்கப்படும் என்றும், மே 16 முதல் 31ம் தேதி வரையிலான டிக்கெட் கட்டணத்தை ஜூலை 3ம் தேதி முதல் பெற்றுக் கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் 1 முதல் 30ம் தேதி வரையிலான டிக்கெட் முன்பதிவு கட்டணமானது, ஜூலை 10 ஆம் தேதி முதல் முன்பதிவு மையங்களில் வழங்கப்படும் என்றும்,குறிப்பிட்ட தேதிகளில் பணத்தை திரும்ப பெற முடியாதவர்கள் பயணத்தேதியில் இருந்து 180 நாட்களுக்குள் எப்பொழுது வேண்டுமானாலும், பணத்தை திரும்ப பெற்றுக்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காலை10 மணி முதல் மாலை 5 மணி வரை முன்பதிவு மையங்கள் திறந்திருக்கும் எனவும், ரத்து செய்யப்படும் டிக்கெட்டில் எந்த பிடித்தமும் இல்லாமல் முழு கட்டணமும் திரும்ப கொடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.சென்னை கோட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் மட்டும் 19 சிறப்பு மையங்கள் திறக்கப்பட்டுள்ள நிலையில், சென்ட்ரல் ரயில் நிலையத்தில் தனிமனித இடைவெளி முறையாக கடைபிடிக்கப்பட்டு டிக்கெட் கட்டணம் திரும்ப வழங்கப்பட்டு வருகிறது.