சமூக வலைதளத்தை பயனுள்ளதாக மாற்றி அசத்தல் - முன்னுதாரணமாக திகழும் வைத்தீஸ்வரன் கோவில் பேரூராட்சி

சமூக வலைதளத்தை மக்களுக்கு பயனுள்ளதாக மாற்றி, முன்னுதாரணமாக திகழும் மயிலாடுதுறை மாவட்டம் வைத்தீஸ்வரன் கோயில் பேரூராட்சிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறன.

Update: 2020-05-31 07:09 GMT
சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோவில் பேரூராட்சி செயல் அலுவலராக பணியாற்றி வரும் குகன், பேரூராட்சி மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். பேரூராட்சிக்கு தனி முகநூல் பக்கம் தொடங்கப்பட்டு பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன.மேலும் ஊரடங்கு காலத்தில் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைத்து தரப்பினருக்கும் பல்வேறு போட்டிகளை நடத்தி பயனுள்ளதாக பேரூராட்சி மாற்றியுள்ளது. தற்போது புது முயற்சியாக ஹலோ பேரூராட்சி என்ற வாட்ஸ் ஆப் செயலியை அறிமுகம் செய்து, அதன்மூலம் மக்களிடம் புகார்கள் பெறப்படுகின்றன. புகார்கள் மீது இரண்டு முதல் 24 மணி நேரத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், கடந்த 2 நாட்களில் மட்டும் 40 புகார்கள் வந்துள்ளன. அவை அனைத்திற்கும் தீர்வு காணப்பட்டுள்ளது. மேலும் இது குறித்த புகைப்படங்கள் பேரூராட்சி பணியாளர்களுடன் சமூக வலைதளங்களில் பதிவிடப்படுகிறது. இதனால் பேரூராட்சி பணியாளர்களும்  உற்சாகமாக வேலை செய்து வருகின்றனர்
Tags:    

மேலும் செய்திகள்