சென்னை பல்கலைக்கழகத்தை நிர்வகிக்க குழு - உயர்கல்வித்துறை செயலாளர் தலைமையில் அமைப்பு

சென்னை பல்கலைக்கழகத்தை நிர்வகிக்க, உயர்கல்வித்துறை செயலாளர் அபூர்வா தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.

Update: 2020-05-23 04:06 GMT
சென்னை பல்கலைக்கழகத்தை நிர்வகிக்க, உயர்கல்வித்துறை  செயலாளர் அபூர்வா தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் துரைசாமியின் பதவிக்காலம் வரும் 27-ஆம் தேதியுடன் முடிவடைகிறது. புதிய துணைவேந்தர் நியமிக்கப்படும் வரை, பல்கலைக்கழகத்தை நிர்வகிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது. தொழில் நுட்ப கல்வி இயக்குனர் விவேகானந்தன், சென்னை பல்கலைக்கழக பேராசிரியர் சுந்தரம்,  வைஷ்ணவா கல்லூரி முதல்வர் லலிதா  ஆகியோர் அக்குழுவில் இடம்பெற்றுள்ளனர்.


Tags:    

மேலும் செய்திகள்