அதிமுக சார்பில் ஒரு சிப்பம் அரிசி வழங்கப்பட்டது - 520 குடும்பங்களுக்கு தலா ஒரு சிப்பம்
சேலம் மாவட்டம் சங்ககிரி ஒன்றியத்தில் அதிமுக சார்பில், ஏழை, எளிய 520 குடும்பங்களுக்கு தலா ஒரு சிப்பம் அரிசி வழங்கப்பட்டது.;
சேலம் மாவட்டம் சங்ககிரி ஒன்றியத்தில் அதிமுக சார்பில், ஏழை, எளிய 520 குடும்பங்களுக்கு தலா ஒரு சிப்பம் அரிசி வழங்கப்பட்டது. தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் அறிவுறுத்தல் படி, சேலம் மாவட்டம் சங்ககிரி ஒன்றியம் தாசநாயக்கன்பாளையம், புள்ளிபாளையம் ஆகிய பகுதிகளில் அரிசி வழங்கப்பட்டது. அதிமுக சார்பில், ஒன்றிய மாணவரணி செயலாளரும், முதலமைச்சரின் மைத்தனருமான வெங்கடேஷ் நேரடியாக சென்று, சமூக இடைவெளியுடன் நிவாரணங்களை வழங்கினார்.