500 குடும்பங்களுக்கு அரிசி வழங்கிய சுன்னத் ஜமாத்
அரூர் மேல் பாட்ஷ்பேட்டை சுன்னத் ஜமாத் சார்பில், 500 ஏழை எளிய குடும்பத்தினருக்கு தலா 10 கிலோ என ரூ.3 லட்சம் மதிப்பிலான அரிசி வழங்கப்பட்டது.;
அரூர் மேல் பாட்ஷ்பேட்டை சுன்னத் ஜமாத் சார்பில், 500 ஏழை எளிய குடும்பத்தினருக்கு தலா 10 கிலோ என ரூ.3 லட்சம் மதிப்பிலான அரிசி வழங்கப்பட்டது. இதில் அரூர் சார் ஆட்சியர் மு.பிரதாப் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு அரிசியை வழங்கினார். இந்த நிவாரணப் பொருட்களை பொதுமக்கள் சமூக இடைவெளியை பின்பற்றி வரிசையில் நின்று வாங்கி சென்றனர்.