அரசு ஊழியர்களுக்கு இலவச கிருமி நாசினி - மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு

சேலம் மாவட்டத்தில் உள்ள நீதிமன்றம், காவல்துறை மற்றும் அரசு ஊழியர்களுக்கு கிருமிநாசினி திரவம் இலவசமாக தரப்பட உள்ளன.

Update: 2020-03-21 18:22 GMT
சேலம் மாவட்டத்தில் உள்ள நீதிமன்றம், காவல்துறை மற்றும் அரசு ஊழியர்களுக்கு கிருமிநாசினி திரவம் இலவசமாக தரப்பட உள்ளன. இதற்கான திரவங்கள் தயாரிக்கும் பணியை மாவட்ட ஆட்சியர் ராமன் நேரில் ஆய்வு மேற்கொண்டார். இதனைத் தொடர்ந்து அரசு துறைகளுக்கு அனுப்பி வைக்கும் பணி நடைபெற்றது. ஊடகத்தினருக்கும், செவிலியர்களுக்கும் கிருமிநாசினி திரவத்தை இலவசமாக மாவட்ட ஆட்சியர் ராமன் வழங்கினார். மாவட்ட சுகாதார மைய அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்படும் கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டு மையம் தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்