உயிரின பூங்கா பகுதியில் பரவிய காட்டு தீ - தீவிர முயற்சிக்கு பின் தீ கட்டுக்குள் வந்தது
கன்னியாகுமரி மாவட்டம் உதயகிரி கோட்டை உயிரின பூங்கா பகுதியில் பரவிய காட்டு தீயை வனத்துறையினர் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு கட்டுக்குள் கொண்டு வந்தனர்;
கன்னியாகுமரி மாவட்டம் உதயகிரி கோட்டை உயிரின பூங்கா பகுதியில் பரவிய காட்டு தீயை வனத்துறையினர் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதனால் அந்த பூங்காவில் உள்ள மான்கள் உள்ளிட்ட உயிரினங்களும் , மயில்கள் போன்ற பறவைகளும் உயிர் தப்பின. கோட்டையின் பல பகுதிகளில் பரவிய தீயை பொதுமக்கள் உதவியோடு வனத்துறையினரும், தீயணைப்புத்துறையினரும் போராடி அணைத்தனர். மர்ம நபர்கள் யாரேனும் தீ வைத்தார்களா என விசாரணை மேற்கொண்டு வரும் வனத்துறையினர் அப்பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.