ஜெயலலிதாவின் பிறந்த நாளையொட்டி வைக்கப்பட்ட பேனர்கள் - போலீசாரின் உத்தரவுப்படி அகற்றப்பட்டன
மதுரை மாவட்டம் மேலூர் அருகே முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாளையொட்டி வைக்கப்பட்டிருந்த பேனர்கள் போலீசாரின் உத்தரவுப்படி அகற்றப்பட்டன.;
மதுரை மாவட்டம் மேலூர் அருகே முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாளையொட்டி வைக்கப்பட்டிருந்த பேனர்கள் போலீசாரின் உத்தரவுப்படி அகற்றப்பட்டன. கருங்காலக்குடி நான்கு வழிச்சாலையில்
6 இடங்களில் வைக்கப்பட்டிருந்த பேனர்கள் குறித்து தெரிவிக்கப்பட்ட புகாரின் பேரில் கொட்டாம்பட்டி காவல் ஆய்வாளர் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை மேற்கொண்டார். அவரது உத்தரவுப்படி அங்கிருந்த அனைத்து பேனர்களும் அகற்றப்பட்டன.