அயனாவரம் சிறுமி பலாத்கார வழக்கு - தண்டனையை ரத்து செய்ய கோரி மனு

அயனாவரம் சிறுமி பலாத்கார வழக்கில் தண்டனை பெற்ற குற்றவாளி உமாபதி சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.

Update: 2020-02-18 09:51 GMT
அயனாவரம் மாற்றுத்திறனாளி சிறுமி, பலாத்கார வழக்கில், 5 பேருக்கு ஆயுள் தண்டனையும், ஒருவருக்கு 7 ஆண்டு சிறையும், 9 பேருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும்  விதித்து போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்தது. தண்டனை பெற்ற குற்றவாளிகளுள் ஒருவரான உமாபதி, சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். தனக்கு அதிகபட்சமாக விதிக்கப்பட்டுள்ள ஐந்து ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என மனுவில் கோரியுள்ளார். மேலும், தண்டனையை நிறுத்தி வைத்து தனக்கு ஜாமின் வழங்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Tags:    

மேலும் செய்திகள்