"5,000-க்கும் அதிகமான மரங்களை வெட்ட இடைக்கால தடை" - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அதிரடி உத்தரவு

தேனி மாவட்டம் மயிலாடும்பாறை பகுதியில் உள்ள 5 ஆயிரத்துக்கும் அதிகமான மரங்களை வெட்ட உயர்நீதிமன்ற மதுரைக்கிளை இடைக்கால தடை விதித்துள்ளது.

Update: 2020-02-06 22:04 GMT
நாகூர் ஹனிபா என்பவர் தொடர்ந்த இந்த வழக்கில், மயிலாடும்பாறை பகுதியில் 5 ஆயிரத்திற்கும் அதிகமான மரங்கள் வெட்டப்பட உள்ளதாக தெரிவித்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் துரைசுவாமி, ரவீந்திரன் அமர்வு, மறு உத்தரவு வரும் வரை மரங்களை வெட்டக்கூடாது என இடைக்கால தடை விதித்தனர். மேலும்,  இதுகுறித்து தேனி மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை, வரும் 13-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர். 
Tags:    

மேலும் செய்திகள்