கரூர்: செந்தில்பாலாஜியின் அலுவலக பூட்டை உடைத்து சோதனை

செந்தில்பாலாஜியின் அலுவலகத்தை திறந்து சோதனை நடத்த எதிர்ப்பு தெரிவித்து திருநங்கை தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Update: 2020-01-31 13:10 GMT
கரூர் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி மற்றும் அவரது சகோதரர் வீடுகள், ஜவுளி ஏற்றுமதி நிறுவனம், அலுவலகம் ஆகிய இடங்களில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்தினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, செந்தில்பாலாஜியின் வீடு முன்பு திமுகவினர் திரண்டனர். இதனிடையே, செந்தில் பாலாஜியின் மத்திய நகர திமுக அலுவலகத்தின் பூட்டை உடைத்து சிபிசிஐடி போலீசார் சோதனை செய்தனர். இதற்கு, கடும் எதிர்ப்பு தெரிவித்த திமுகவினர், போலீசாருடன் வாக்குவாதம் செய்ததால் கடும் அமளி நிலவியது. இதனால், ஆத்திரமடைந்த செந்தில் பாலாஜி ஆதரவாளரான பாவனா என்ற 40 வயது திருநங்கை, உடலில் மண்ணெண்ணை ஊற்றி தீக்குளிக்க முயன்றார். உடனடியாக அங்கிருந்த திமுகவினர், அவரை தடுத்து, தண்ணீரை ஊற்றி அணைத்தனர்.  

Tags:    

மேலும் செய்திகள்