திருமூர்த்தி அணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட முதலமைச்சர் பழனிசாமி உத்தரவு

திருப்பூர் மாவட்டம் திருமூர்த்தி அணையிலிருந்து வரும் 27 ந்தேதி முதல் பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

Update: 2020-01-24 23:04 GMT
திருப்பூர் மாவட்டம் திருமூர்த்தி அணையிலிருந்து வரும் 27 ந்தேதி முதல் பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். பரம்பிகுளம் ஆழியாறு திட்டத்தில் பாலாறு உப வடிநில முதலாம் மண்டல பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடக்கோரி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.  4 சுற்றுகளில் மொத்தம் 7600 மில்லியன் கன அடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்து விட ஆணையிட்டுள்ளதாகவும், இதன் மூலம் கோயம்புத்தூர், திருப்பூர் மாவட்டங்களில் உள்ள 94 ஆயிரத்து 521 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறும் என்றும் முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்