"பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம் தமிழகத்தில் அதிகம்" - சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்

பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம் இந்தியாவிலேயே தமிழகத்தில் அதிகமாக உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.;

Update: 2020-01-24 07:32 GMT
தேசிய பெண் குழந்தைகள் தினம் இன்று கொண்டாடப்படும் நிலையில் தமிழக அரசு சார்பில் சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதில் அமைச்சர் விஜயபாஸ்கர் கலந்து கொண்டு பேரணியை தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இந்திய அளவில் 1000 ஆண் குழந்தைகளுக்கு 914 பெண் குழந்தைகள் என்ற நிலையில் தமிழகத்தில் 1000 ஆண்களுக்கு 943 பெண் குழந்தைகள் எனும் பிறப்பு விகிதம் உள்ளதாகவும், பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதத்தை அதிகரிக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்