ஒத்தி வைக்கப்பட்ட ஊரக உள்ளாட்சி பதவியிடங்களுக்கான தேர்தல் - வரும் 30ஆம் தேதி நடைபெறும் - தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு
பல்வேறு காரணங்களால் ஒத்தி வைக்கப்பட்ட மாவட்ட ஊராட்சி தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கான தேர்தல் வரும் 30ஆம் தேதி நடைபெறும் என தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.;
ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் கடந்த 11ஆம் தேதி நடைபெற்ற மறைமுகத் தேர்தலின் போது மாவட்ட ஊராட்சி தலைவர் உள்ளிட்ட பதவியிடங்களுக்கான தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டது.
அதன்படி ஒரு மாவட்ட ஊராட்சி தலைவர் பதவியிடம் , ஒரு மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் பதவியிடம்
26 ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவருக்கான பதவியிடங்கள், 41 ஊராட்சி ஒன்றிய குழு துணைத் தலைவர் பதவியிடங்கள், 266 கிராம ஊராட்சி துணைத் தலைவர் பதவியிடங்கள்
என 335 பதவியிடங்களுக்கான தேர்தல் வரும் 30ஆம் தேதி நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடைய உள்ளாட்சி அமைப்புகளின் உறுப்பினர்கள் கலந்து கொண்டு வாக்களிக்க வேண்டும் என்றும் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.