திருவள்ளுவர் திருநாள் விருதுகள் வழங்கும் விழா - விருதுகள் வழங்கி சிறப்பித்தார் முதலமைச்சர்

ஏட்டளவிலும், பேச்சளவிலும் நிலைத்து நிற்கும் தொன்மையான மொழி என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

Update: 2020-01-20 07:14 GMT
சென்னை கலைவாணர் அரங்கில் 2019-ம் ஆண்டிற்கான திருவள்ளுவர் தின விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில், திருவள்ளூவர் விருது நித்யானந்த பாரதிக்கு வழங்கப்பட்டது. தந்தை பெரியார் விருது செஞ்சி இராமச்சந்திரனுக்கும் அண்ணல் அம்பேத்கர் விருது முனைவர் அருச்சுணனுக்கு வழங்கப்பட்டது. அறிஞர் அண்ணா விருது சமரசத்திற்கு வழங்கப்பட்டது.  பெருந்தலைவர் காமராசர் விருது முனைவர் மதிவாணனுக்கும், மகாகவி பாரதியார் விருது முனைவர் சிவராஜிக்கும், பாவேந்தர் பாரதிதாசன் விருது தேனிசை செல்லப்பாவிற்கு வழங்கப்பட்டது. இதேபோல்,சித்திரை தமிழ் புத்தாண்டு விருதுகளும் வழங்கப்பட்டன. இதை தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, உண்மையான மூத்த மொழி   தமிழ் என குறிப்பிட்டார்.  உலக பொதுமறையாக விளங்கும் திருக்குறள், எந்த காலத்திற்கு பொருந்தும் வகையில் உள்ளதாகவும் முதலமைச்சர் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்